Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

Friday, 25 July 2025

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzheimer’s patient is locked up in a house when Dhaya (Fahadh), a petty thief breaks in. He agrees to free Velayutham in return for a petty amount, only to find later that Velayutham has an enormous amount in his bank account. Dhaya sets his eyes on the money and decides to spend more time with him. They decide to go on a road trip and their destinations keep changing owing to Velayutham’s memory and Dhaya’s plan to loot. In this journey, they get to know each other and their lives take unexpected turns.

The first half takes time to establish how the connection between the two characters evolves. The first half moves at a slow pace only to shift gears with an arresting interval block. From then on, there is no looking back. The twists and turns keep coming, but in a measured pace instead of throwing in everything at once and overwhelm the audience. The story doesn’t dwell deep into the characters other than the two primary characters and there are some key plots left open. The film conveys a strong message which is seamlessly written into the storyline. Though  solution the movie draws in the end is a little flawed, the movie still holds your attention all along. 

The emotional scenes are not melodramatic and hit the right chord. Vadivelu shines in these scenes and brings out the under-utilised potential in him. There is nothing forcefully fit in the storyline, even Yuvan Shankar Raja’s placement of the remixed version of “Nethu oruthara oruthara paaththom” is seamlessly interwoven into the story. The camaraderie between FaFa and Vadivelu is evident in this song.


Vadivelu as Velayutham is brilliant and completely submits himself to the character. He sheds all his comical strengths though the opportunities are aplenty and strictly sticks to his character. Even there are occurrences when we want him to break out of his character and deliver a comical punch, but Vadivelu denies it and manages to pull off the unbelievable. FaFa is effortless in his portrayal of petty thief Dhayalan. 

Bottomline - A slow burn suspense thriller with a brilliant Vadivelu and an effortless FaFa outshining each other.

Monday, 22 January 2024

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமாரின் ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல். கவிதைகளில் இடம்பெரும் துள்ளிய வர்ணனையும், அசரவைக்கும் கற்பனையும் தமிழ் திரையுலகில் முத்துக்குமாரின் நிரப்பப்படா இடத்தை நினைவூட்டுகிறது. அவரது எழுத்துக்கள் இயல்பானவை, தனது புலமையைக் காட்டி வாசகனை என்றுமே திக்குமுக்காட செய்ததில்லை. 

தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களையும், நம்மை சுற்றி நடக்கும் சாதாரண நிகழ்வுகளையும், நமது உணர்வுகளையும் நமக்கு நெருக்கமான மொழியில் இக்கவிதைகளில் தருகிறார். 



கவிஞர் தனது பால்யத்தை விவரிக்கும் கவிதைகளில் அம்மா, அப்பா மற்ற உறவுகளுடன் பள்ளி அனுபவங்கள், நண்பர்களின் நினைவுகள் என அடுக்கும் போது, அவை நம்முடைய பால்யத்தை நினைவூட்டும் ஒரு nostalgic experience ஆக அமைகிறது.



அவர் கடவுளை விடவும் இயற்கையை அதிகமாக விரும்பியதை பல இடங்களில் காண முடிகிறது. பகுத்தறிவு கருத்துக்களுடன் பெண் விடுதலை, பாலின சமத்துவம் பேசும் கவிதைகள் இந்த தொகுப்பு முழுக்க நிரம்பி இருக்கின்றன. சமகால சமூக சூழலை பிரதிபலிக்கும் கவிதைகள் கவிஞரின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் பதிவு செய்கின்றன. 

"தூர்" எனும் கவிஞரின் பிரசித்தி பெற்ற கவிதையைத் தவிர்த்து என்னை கவர்ந்த சில கவிதைகள்...

அம்மாவின் கரிச் சுவர்

ஒவ்வொறு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக்கொள்கிறது
சமையலறைச் சுவர்.

...

அம்மாவுக்காய் அழுகிற
ஈர விறகுகளின்
புகைச் சோகம் தாங்கி
மேலும் கறுக்கும் அது.

...
அக்காவுக்கு இவற்றிலிருந்து 
சீக்கிரம் விடுதலை.

கல்யாணம் ஆனதும்
கேஸ் குக்கர்
சுவரில் டிஸ்டெம்பர்

சுவர் விடுதலை மட்டும் 
பெண் விடுதலை என்றால்
அம்மாக்களை விட
அக்காக்கள் அதனை
அடைந்து விட்டார்கள்.


இட்லி புத்திரர்கள்

இட்லிகள் கொள்கையற்றவை
சாம்பாரில் மிதவையாகவும்
சட்னியில் துவையலாகவும்
ஏதுமற்ற பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

பெயர் உருவான கதை

ஆரம்பத்தில் அதன் பெயர்
வேறாக இருந்தது.

அதன் பலகீனம்
இருபுறம் சுவர் சூழ்ந்த
குறுபாதை எனலாம்.

...

ஆத்திரம் மட்டுமே
அடக்கக் கற்ற
மனிதர்கள் கூடி
அதற்கொரு பெயர்
அப்புறம் வைத்தனர் 
மூத்திரச் சந்து.

சலூன் கண்ணாடிகள்

பிமபங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்.

நியூட்டனின் மூன்றாம் விதி

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம் 
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்.

...

உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.

எனதருமை மேல்தளத்து நண்பா...
தலையணையையும் மீறி 
உன்காதுகளில்
சுழன்றுகொண்டிருக்கும்
என் மின்விசிறி!

கட்டணக் கழிப்பிட உரிமையாளன்

ஆச்சா... ஆச்சா... குரல் கொடுத்தபடி
மதிய உணவு உண்கிறான்
கட்டணக் கழிப்பிட உரிமையாளன்.

லிஃப்ட் பயம்

வழக்கம்போல இம்முறையும்
லிப்ட்டில் பயணிக்கையில்
அலாரத்தையே பார்க்கிறேன்.

கோயிலில் ஒதுங்கியவர்கள்

பலத்த மழை
வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கோயிலில் ஒதுங்கியவர்கள்.

பல்லக்கு தூக்கிகள்

சாமியின் முகத்தில்
சந்தனக் காப்பு
பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி

நிழல்

ஜன்னல் கம்பியை வளைத்தது
திருடனல்ல
நிழல்.

தலையணை வாத்துகள்

வாத்துகள்
ரெக்கைகள் இருந்தும்
அதிக உயரம் பறப்பதில்லை.
பிறந்த வீடு, புகுந்த வீடு என
பெண்களைப்போலவே
தண்ணீருக்கும் தரைக்கும்
அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை!

குழந்தைகளுடன் பேசும் கலை

எல்லோரும் ஒரு காலத்தில் 
குழந்தையாக இருநதாலும்
வளர்ந்த பின்
தொலைந்துவிடுகிறது
குழந்தைகளின் உலகத்தைத்
திறக்கும் சாவி.



Sunday, 19 November 2023

Vivekh Sir birth anniversary - 19 Nov 2023

ஆண் மீன் இல்லாட்டி பெண் மீன் செத்துரும் சார், பெண் மீன் இல்லாட்டி ஆண் மீன் செத்துரும் சார்...

~ தண்ணீ இல்லேனா ரெண்டு மீனுமே செத்துருமே பா...

.
.
.
.
.
.

மாஸ்டர்... எனக்கு ஆம்பள புள்ள பிறந்திருக்கு... நீங்க தான் பேர் வைக்கனும்.. "மி" ல முடியுற மாறி தான் பேர் வைக்கனும்னு ஜோசியக்காரன் சொல்லிருக்கான்...

~ கந்தசாமி? ராமசாமி?.... ம்..... 

அதெல்லாம் வேணாம் சார். வேற வைக்கலாமே...

~(Someone calls) Excuse me...

ஆ.... இதான் வேணும்... Excuseme சாப்புட்றான்... Excuseme படிக்கிறான்... சூப்பர்... நான் பெத்த மவனே Excuseme……

~ இதையாடா வைக்கப்போற? "Excuse me" னு ஒரு பேராடா....  Numerology ஓட nuisance தாங்க முடியலயேடா!

The man who questioned superstitious beliefs on-screen with witty dialogues and impeccable timing.



Remembering Vivekh sir on his birth anniversary!

Tuesday, 11 July 2023

Remembering Na. Muthukumar on his birth anniversary

நாம் தினம்தினம் கடந்து போகும் மனிதர்களையும், நம் அருகினில் கவனித்த - கவனிக்க மறந்த தருணங்களையும், நமக்கு நெருக்கமான மொழியில், திரையில் தன் எழுத்தின் மூலம் படரவிட்ட சாமானியனின் பிரதிநிதி - நா. முத்துக்குமார்.  




"காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது"

"கல்லறை மீது பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராது"

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம். பல முகங்கள் வேண்டும் அதை மாட்டிக்கொள்வோம், பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்... கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்... மறு பிறவி வேண்டுமா?" 

Saturday, 19 November 2022

Padmashri Vivek Birth Anniversary 2022

அடப்பாவிகளா... உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு... அதுலலாம் ஓடாத வண்டியாடா இந்த ஒத்த எழுமிச்ச பழத்துல ஓடப்போகுது...?

அப்போ சாதா காக்கா உங்க கிராண்ட் ஃபாதரா, அண்டங்காக்கா உங்க கிரேட் கிராண்ட் ஃபாதரா? யாருக்கிட்டடா விடுறிங்க ரீலு...

The man who questioned the fallacy of superstitious beliefs on-screen with his comedies. 

Remembering Vivek sir on his birth anniversary…



Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...