சூழல்
:
கல்வி
தந்தப் பெண்மணியின் சிலையைப்
பார்த்து,
கல்வி
முடித்துச் செல்லும் மாணவனின்
கவிதை.
வஞ்சம் கொண்ட நெஞ்சம் பல,
லஞ்சம் கேட்டு மிஞ்சுவதுண்டு.
நஞ்சு விளைந்த அந்த நெஞ்சங்களை,
பிஞ்சு நெஞ்சங்கள் கெஞ்சுவதுண்டு.
தஞ்சம் தரும் நெஞ்சம் கொண்டNote : Situational Poetry
நெஞ்சங்களுக்குப் பஞ்சம் உண்டு.
அதில் மிஞ்சும் பேரும் கொஞ்சம் உண்டு,
புரிந்துக் கொண்டேன் உன்னைக் கண்டு!
தஞ்சைக்குக் கொள்ளிடம் போல,
காஞ்சிக்குப் பாலாறு போல,
என் வாழ்விற்கு வளம் சேர்த்தாயே,
கல்வி தந்த என் இரண்டாம் தாயே!
கலைக் கற்று செல்கிறேன் இன்று,
சிலையாய் நீயும் வாழ்த்துகிறாய் நின்று!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்
No comments:
Post a Comment