Showing posts with label Writings. Show all posts
Showing posts with label Writings. Show all posts

Friday, 8 January 2016

தமிழ்


பன்மொழிகள் இவ்வுலகில் தோன்றி மறைந்தும்,
தொண்மொழி எங்கள் தமிழும் பாரும்!
தென்பரத நாட்டில் முடங்கிய போதும்,
வான்புகழ் கொண்ட செம்மொழி ஆகும்!

ஆயிரம் மழைத்துளி கடலில் சேரும்,
அதிலொரு துளி மட்டும் முத்தாய் மாறும்,
ஆயிரம் கவிகள் இப்புவியில் பிறந்தும்,
இருவரியில் புவி தந்தக் கவியும் பாரும்!

இசையும் மொழியே என்பார் பலரும்,
தமிழும் இசையே என்பேன் நானும்!
தமிழ் மெல்லச் செத்தது போதும்,
மறுபிறவி கொண்டு செழித்திட காண்போம்!

எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்

Sunday, 27 December 2015

கல்வி தந்த தாயே!

சூழல் : கல்வி தந்தப் பெண்மணியின் சிலையைப் பார்த்து, கல்வி முடித்துச் செல்லும் மாணவனின் கவிதை.
வஞ்சம் கொண்ட நெஞ்சம் பல,
லஞ்சம் கேட்டு மிஞ்சுவதுண்டு.
நஞ்சு விளைந்த அந்த நெஞ்சங்களை,
பிஞ்சு நெஞ்சங்கள் கெஞ்சுவதுண்டு.
தஞ்சம் தரும் நெஞ்சம் கொண்ட
நெஞ்சங்களுக்குப் பஞ்சம் உண்டு.
அதில் மிஞ்சும் பேரும் கொஞ்சம் உண்டு,
புரிந்துக் கொண்டேன் உன்னைக் கண்டு!

தஞ்சைக்குக் கொள்ளிடம் போல,
காஞ்சிக்குப் பாலாறு போல,
என் வாழ்விற்கு வளம் சேர்த்தாயே,
கல்வி தந்த என் இரண்டாம் தாயே!

கலைக் கற்று செல்கிறேன் இன்று,
சிலையாய் நீயும் வாழ்த்துகிறாய் நின்று!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்
Note : Situational Poetry

கடவுள் யார்?


சிலையும் சிலுவையும் பரம்பொருள் என்றும்,
கதையின் நாயகன் கடவுள் என்றும்,
காவி துறவி சாமி என்றும்,
மதத்திற்காக கலவரம் என்றும்,
தன்னைத் தானே தேவன் என்றும்,
கூவும் மாந்தர் மெய்யும் கேளும்!

மண் செழிக்க மழைத்துளி தரும்,
வான் என்னும் பகவான் பாரும்.
தேனி வாழ தேனைத் தரும்,
ஒரு நாள் தெய்வம் பூவும் பாரும்.
மரம் வளர உரமாய் மாறும்,
நரகல் கூடக் கடவுள் பாரும்!

சேய்க்காக பத்து மாதம் வாடும்,
தாய் என்னும் தெய்வம் பாரும்.
மெய்க் காக்க அன்னம் தரும்,
விவசாயி என்னும் சாமி பாரும்.
நோய் அண்டா அண்டம் தரும்,
ஆய் அள்ளும் ஆண்டவன் பாரும்!

தேவன் என்பவன் ஒருவன் அல்ல...
ஒவ்வொருவனும் தான்!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்.

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...