Monday, 31 October 2022

அப்புசாமியின் கலர் டி.வி.

பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமியின் கலர் டி.வி." முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் நிறைந்த ஒரு குறுநாவல். சென்னை தமிழ் பேசும் அப்புசாமி, சரளமாக ஆங்கிலம் பேசும் சீதாப்பாட்டி என அட்டகாசமான combo-வாக வரும் வயதான தம்பதியினரே இந்நாவலின் பிரதானமான கதாப்பாத்திரங்கள். இந்த முரண்பாடான இரு மனிதர்கள் அவர்களுக்குள் நடக்கும் வாக்குவதங்களிலும், சண்டைகளிலும் அவற்றிலிருந்து தப்பிக்க செய்யும் சமாளிப்புகளிலும் Tom and Jerry ஆக மிளிர்கின்றனர்.



சென்னை தமிழில் வரும் வசனங்களால் பல இடங்களில் சாதாரண ஜோக்குகள் கூட ரசிக்கும்படியாக அமைகின்றன. கதையின் போக்கில் வரும் சின்ன சின்ன suspense-களும், அவை உடைபடும் தருணங்களும் நம்மை கண்கள் நனைய சிரிக்க வைக்கின்றன.  

சில கதாப்பாத்திரங்களும், ஆங்காங்கே வரும் வசனங்களும் மட்டும் சமூகத்தின் பொதுமைப்படுத்தும் பார்வையை சுமந்து இக்கதைக்கு பின்னடைவாக இருக்கின்றன. 

மொத்தத்தில் கலகலப்பான light moments கொண்ட quick read “அப்புசாமியின் கலர் டி.வி.”.

No comments:

Post a Comment

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க...