Showing posts with label Rajeshkumar. Show all posts
Showing posts with label Rajeshkumar. Show all posts

Tuesday, 3 February 2026

ராஜேஷ்குமாரின் "கடைசி தீக்குச்சி"

ராஜேஷ்குமாரின் “கடைசி தீக்குச்சி” ஒரு bio-medical thriller ஆகத் தொடங்குகிறது. ஆரம்பக் காட்சியே அட்டகாசமாக stage செய்யப்பட்டிருக்கிறது. போலீஸ் checkpost-ஐ உடைத்துக்கொண்டு செல்லும் ஒரு van-ஐ போலீசார் துரத்திப் பிடித்து, அதைத் திறந்து, கடத்தப்பட்டது என்னவென்று பார்க்கும் காட்சி பரபரப்பாகவும், எதிர்பாராத முடிவுடனும் அமைகிறது.



அதிலிருந்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் பரபரப்புக்கு குறைவில்லாமல் நாவல் பயணித்தாலும், முதல் காட்சி மட்டுமே ஆழமான தாக்கத்தை அளிக்கிறது. கதையில் ஏகப்பட்ட twists and turns—சில பொருத்தமானவை, பல கடமைக்காக. 


Bio-medical thriller ஆகத் தன்னை identify செய்து கொண்டாலும், நாவல் பெரும்பாலும் Bio tech company ஒன்றில் நடக்கும் serial murders பற்றிய investigative thriller/murder mystery ஆகவே நகர்கிறது. சில இடங்களில் continuity gaps, பல இடங்களில் over-stressing என glaring குறைகளும் உண்டு.

மொத்தத்தில், ஒரு passable read!

Monday, 28 October 2024

ராஜேஷ்குமாரின் "மின்னலாய் வா விவேக்"

ராஜேஷ்குமாரின் விவேக்-விஷ்ணு துப்பறியும் நாவல்கள் வரிசையில் மற்றுமொரு investigative thriller "மின்னலாய் வா விவேக்". உளவுத்துறை டைரக்டரைத் தேடி உளவுத்துறை அலுவலகத்தினுள் நுழையும் ஒரு பெண் நிருபர், அவரை சந்திக்கும் முன் poison செய்யப்படுகிறாள். அவள் இறக்கும் தருவாயில் சில எழுத்துக்களை சொல்லிவிட்டு மடிகிறாள். அதே சமயத்தில் இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்கிறார்கள். இருவருக்கும் என்ன சம்பந்தம், இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என்ன என்பதை விவேக் - விஷ்ணு துப்பறிய முயல்கின்றனர். இன்னொரு உயிர் பலியாவதற்குள் கொலையாளி அடையாளம் காணப்படுவானா?

Rajeshkumar
Murder mystery ஆக துவங்கும் இந்நாவல் ஒரு conspiracy thriller ஆக மாறுகிறது. இறந்து போன பெண் நிருபர் உச்சரித்த எழுத்துகளின் பின்னணியில் உள்ள மர்மத்தை, ஒரு wafer thin suspense-ஐ வைத்து கதை நகர்கிறது. இதை சுற்றி பல திருப்பங்கள் இருந்தும் கதை consistent high points இல்லாமல் flat ஆக பயணிக்கிறது. நாவலின் நடுவே வரும் tidbits போன்ற சம்பந்தமில்லா செய்திகள் கதையின் வேகத்தை மேலும் குறைக்கின்றன. மேலும் தீவிரவாதம், பாக்கிஸ்தான் அமைப்பின் சதி என stereotyping நாவல் நெடுக பரவியிருக்கிறது.

ராஜேஷ்குமாரின் "மின்னலாய் வா விவேக்" தலைப்புக்கு நியாயம் செய்யாத ஒரு mediocre attempt.

Saturday, 24 February 2024

ராஜேஷ் குமாரின் "ஒரு துளி கடல்"

க்ரைம் மற்றும் மர்ம நாவல்களில் பிரசித்தி பெற்ற ராஜேஷ் குமாரின் ஒரு social drama இந்த நாவல். இருவேறு கதைக்களம், இருவேறு சூழ்நிலை, இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் என இந்நாவல் தங்குதடையற்ற non-linear narrative ஆக பயணிக்கிறது.
 

சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீற முற்படாத பெண்ணாக பூர்ணிமா - வேறு ஒரு கதைகளத்தில் தன் சுதந்திரத்தை உணர்ந்து சமூகம் மூர்க்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டுகளிலிருந்து விடுபட முயலும் பெண்ணாக ரோகிணி. ஒரு ஆணின் சுயநலத்தால் இவ்விரு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அவற்றை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முடிவுகளுமே கதையின் கரு. பிரச்சினைகளை எதிர்கொள்ள பூர்ணிமா தியாகம் செய்கிறாள், ரோகிணி சமரசமில்லாமல் எதிர்த்து நிற்கிறாள். 

இவ்விரு கதைகளின் பிண்ணனியில் இரத்த தானம், உடலுறுப்பு தானம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், அடுத்த தெரு மருத்துவருக்கும் multi specialty மருத்துவமணையின் மருத்துவருக்குமான ethics ரீதியான வேற்றுமை ஆகியவை பற்றிய social commentary மேலோட்டமாய் அமைந்தாலும் கதையோடு பொருந்தி அமைகிறது.


பல திருப்புமுனைகளுடன் அமையும் கதையோட்டம், பேச்சுவழக்கான வார்த்தை பிரயோகம், எளிய மொழியில் அமையும் கதைசொல்லல் முறை ஆகியவை வெகுஜன மக்களிடம் ராஜேஷ் குமாரின் நாவல்களை சேர்த்துள்ளன. அதனால், இந்நாவலில் அமையும் "over the top” காட்சிகள் கூட கதையின் ஒட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காமல் நகர்கின்றன.

Saturday, 29 July 2023

ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்"

2014-ல் காணாமல் போன மலேஷிய விமானம் MH370 இன்று வரை மர்மமாக உள்ள நிலையில், ராஜேஷ்குமாரின் "வெல்வெட் குற்றங்கள்" அந்த சம்பவத்தைச் சுற்றி ஒரு புனைவாக அமைந்துள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா? இல்லை, கடத்தப்பட்டதா? அதில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன? இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இச்சம்பவம் வல்லரசு நாடுகளின் விஞ்ஞான போட்டிகளின் விளைவா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதாக கதையின் போக்கு அமைந்துள்ளது. 



"Thriller” நாவல்களுக்கே உள்ள பாணியில் கதையின் மாந்தர்களில் யார் உண்மையின் பக்கம், யார் தீமையின் பக்கமென கணிக்க முடியாத திருப்பங்களுடன் இந்நாவல் வாசகனின் ஆர்வத்தை தக்க வைக்க முயல்கிறது. கேள்வி படாத பல அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் இந்நாவலில் பிரதானமாக இடம்பெறுவது, சிலவற்றை நமக்கு அறிமுகப்படுத்தினாலும், தேவைக்கு அதிகமாக அமைந்து சில இடஙகளில் சலிப்பு தட்டுகிறது. 

ஏராளமான கதாப்பாத்திரங்கள் வலம் வந்தும், கதையை விட்டு எங்கும் விலகி செல்லாமல் பயணிக்கிறது இந்நாவல். ஒவ்வொறு அத்தியாயத்தின் முடிவிலும் போடப்படும் முடிச்சு, அதை தொடர்ந்து கதையில் அமையும் காட்சிகளின் வேகம் ஆகியவையே இந்நாவலின் பலம். கதையின் climax கலவையான விமர்சனங்களை பெறலாம்.

ராஜேஷ்குமார் style-ல் ஒரு நல்ல thriller, a light read. 

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...