Showing posts with label Sujatha. Show all posts
Showing posts with label Sujatha. Show all posts

Sunday, 8 February 2026

சுஜாதாவின் "நில்... கவனி... தாக்கு!"

சுஜாதாவின் “நில்… கவனி… தாக்கு…!” முழுக்க முழுக்க first-person narration-ல் சொல்லப்படும் ஒரு conspiracy thriller நாவல்.

நாட்டின் ரகசியங்களை பாதுகாக்கும் அமைப்பில் பணியாற்றும் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர நியமிக்கப்படுகிறான். அழைத்து வரும் வழியில் விஞ்ஞானி ஒரு மர்ம கும்பலால் கடத்தப்படுகிறார். 

இந்த கடத்தல் தன் மேற்பார்வையில் நடந்ததன் தீவிரம் அவனுக்கு புரியும்போது, தனது தவறை நினைத்து பயம் மற்றும் குற்ற உணர்வு அவனை ஆட்கொள்கிறது. அதே நேரத்தில், எந்த ஆதரவுமின்றி தனி ஆளாகவே விஞ்ஞானியை மீட்க களமிறங்குகிறான். அங்கிருந்து பல action காட்சிகளுடன் ஒரு action thriller ஆக மாறுகிறது கதையின் போக்கு.



Sole twist ஒன்றை நோக்கி நகரும் இந்த நாவல், இறுதிவரை சற்று தொய்வுகளுடனே பயணிக்கிறது. அந்த ஒரே twist உண்மையிலேயே திருப்திகரமாக இருக்கிறதா என்பது சந்தேகமே. நல்ல premise இருந்தும், conspiracy thriller ஆக தொடராமல் ஒரு passable read ஆக மட்டுமே அமைகிறது.

Sunday, 4 August 2024

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்"

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்" வழக்கறிஞர்கள் கணேஷ்-வசந்த் duo தோன்றும் மற்றுமொரு murder mystery. பிரபல தொழிலதிபர் சிவப்பிரகாசம் என்பவர் கணேஷை தொலைப்பேசியில் அழைத்து தன்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது எனக் கூறி அவனது உதவியை நாடுகிறார், அரை மணி நேரத்துக்குள் தன்னை வந்து சந்திக்குமாறும் வற்புறுத்துகிறார். கணேஷ்-வசந்த் அங்கே சென்றடைவதற்குள் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். தொழில் விரோதம், குடும்பச் சிக்கல், சொத்துரிமை தகராறு என பல குழப்பங்களுக்கு நடுவில் கணேஷ்-வசந்த் இருவரின் investigation துவங்குகிறது. 




ஒரு template murder mystery ஆக துவங்கும் இந்நாவல் ஒரு investigation drama-வாக மாறி பயணிக்கிறது. ஆனால் ஒரு மர்ம நாவலுக்கு தேவையான பரபரப்பு குறைவே. நாவல் நெடுக வரும் ஆபாச வசனங்கள் சாதிப்பது “objectifying women” மட்டுமே, கதையின் ஓட்டத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆங்காங்கே அமையும் அரசியல் வசனங்களில் சுஜாதாவின் ideological stance வெளிப்படுகிறது. 

நாவலின் நீளம் குறைவானதாக இருப்பது சாதகமாக அமைகிறது. எனினும் இந்நாவல் புதிதாக ஏதும் வழங்காத ஒரு highly predictable, done and dusted murder mystery. 

Saturday, 15 May 2021

சுஜாதாவின் "நைலான் கயிறு"

வாசிக்கும் போது இது மற்றுமொரு Murder mystery நாவல் தான் எனத் தோன்றியது. Mystery நாவலுக்கு தேவையான விறுவிறுப்பினை இந்த நாவலும் தக்கவைக்க முயல்கிறது. மர்மமான முறையில் நடந்தேறும் ஒரு கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, சவாலாக எதிர்கொள்ளும் அதிகாரி என்னும் Template தான். ஆனால் ஒரு diary-யின் குறிப்புகளைக் கொண்டு Non-linear narrative-ஐ புகுத்தி வாசகர்களின் ஆர்வத்தை தக்கவைப்பது சுஜாதாவின் brilliance.




“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...