ஒரு உயர்நிலை போலீஸ் அதிகாரி.
இவர்களை மிரட்டும் ஒரு blackmailer.
முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சருக்கும், ஒரு டி.ஐ.ஜிக்கும் மரணதேவன் என்ற நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. இருவரும் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்று காலக்கெடு விதிக்கும் அவன், அதை மீறினால் கொலை செய்வதாகவும் மிரட்டுகிறான்.
யார் இந்த மர்ம நபர்? இவர்கள் மூவரையும் இணைக்கும் புள்ளி எது?
ஒரு template revenge drama கதையாக இருந்தாலும், அதை present செய்யும் விதத்தில் விறுவிறுப்பு குறையாமல் கதை நகர்கிறது.
இந்நாவல் melodramatic ஆக மாறக்கூடிய பல இடங்களிலும் emotions-ஐ controlled-ஆக வைத்திருந்து, அதே சமயத்தில் வாசகரிடம் அதை சரியாகக் கடத்துவதும் சிறப்பு. குறிப்பாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளை அதிகப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் அழுத்தம் கொடுப்பது கதையின் flow-ஐ பாதிக்காமல் இருக்க உதவுகிறது.
இருவேறு timeline-களில் non-linear-ஆக எழுதப்பட்ட அத்தியாயங்கள், கதையின் suspense-ஐ தொடர்ந்து hold செய்கின்றன. Predictable ஆக இருந்தாலும், போதுமான drama இருப்பதால் தொய்வே இல்லாமல் பயணிக்கிறது பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்நாவல்.


No comments:
Post a Comment