Sunday 18 December 2022

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"  அவரது குறுநாவல்கள் சிலவற்றின் தொகுப்பு.


கண்டுபிடியுங்கள்
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார் நகைக் கடை உரிமையாளர் ஒருவர். கடத்தலா? கொலையா? காதலால் வீட்டை விட்டு ஓட்டமா? என்று அப்பெண் மாயமானதன் மர்மம் கதையை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. இடையிடையே வரும் கதாப்பாத்திரஙகளின் மர்மமான நடவடிக்கைகளும், அவர்கள் மீது எழும் சந்தேகங்களும் “suspense thriller”-களுக்கான template. முடிவில் வரும் திருப்பம் எதிர்பாராதது எனினும், அது வாசகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெறலாம். 

தயவு செய்து
நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறாள். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் எதிர்வினையும், அதனால் வரும் நெருக்கடியும், அதிகாரமும் பணபலமும் அவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் உரையாடல்கள் மூலம் கதையில் சொல்லப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், அதன் விளைவாய் அவள் தந்தை அந்த சூழ்நிலைக்கு தேடும் தீர்வுகளும் சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. ஆனால் அந்த எதார்த்தம் சரி தானா என கேள்வி எழுகிறது.


டேக் நம்பர் 2
விறுவிறுப்பான suspense நிறைந்த thriller கதை இது. சின்ன சந்தர்ப்பம் அமைந்தாலும் பணத்தை கரக்க பிசிரில்லாமல் திட்டம் போட்டு மோசடி செய்யும் மனிதர்கள் நிறைந்த உலகமே இந்த கதையின் களம். கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களாலும், அடுத்தடுத்து வரும் உச்சக்கட்டக் காட்சிகளாலும் கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. Template ஆன ஆட்கடத்தல் கதையாக ஆரம்பித்தாலும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் இக்கதையை cliche என்று சொல்ல முடியாதபடி காப்பாற்றுகின்றன.


சந்திரன் சாட்சியாக
பெண்கள் வேலைக்கு செல்லுமிடத்தில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பலர் மௌனத்துடன் கடந்து செல்வர். ஆனால் சிலர் அதை எதிர்க்க நினைக்கும் போது அவர்களுக்கு வரும் சிக்கல்கள், அவர்களை பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம், சட்ட ரீதியான சாட்சியங்கள் ஆகியவை பெரும்பாலும் அவர்களை பலவீனப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கும் ஒரு பெண்ணிண் கதை இது. மேம்போக்காக இந்த பிரச்சினையை அணுகி, கதையின் ஓட்டத்துக்காக commercial elements-ஐ புகுத்தி, நம்பகத்தன்மை சிறிதும் இல்லாத climax-ல் முடிகிறது இக்கதை. 

புதிய குதிரை-7-710
நகைக் கடைக் கொள்ளை - பணயமாக ஒரு பெண் ஊழியர் - கொள்ளையர்களை தேடும் அதிகாரி - வழக்கமான thriller கதை. கதை எந்த தருணத்திலும் உச்சக்கட்டத்தை அடையாமல் flat ஆக பயணிக்கிறது. விறுவிறுப்பாக அமைய கதையின் அமைப்பும், கதையின் போக்கும் கைக்கொடுக்கவில்லை. 

மதிப்புக்குரிய ரகசியம்
ஒரு decent conspiracy thriller ஆக துவங்கும் இக்கதை, அதன் பின் வழக்கமான thriller கதைகளுக்கான வரம்புக்குள் சிக்கிக் கொள்கிறது. Conspiracy பிரதானமாக இல்லாமல், அதை தடுப்பதற்காக கையாளப்படும் யுக்திகளை மட்டும் நம்பி பயணிக்கிறது. நல்ல conspiracy thriller கதைக்கான அமசங்கள் அமைந்தாலும், predictable ஆக நகர்ந்து தோற்கிறது இக்கதை.

... ஆகையால் இறந்தாள்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். காவல்துறை விசாரணையில் முன்னாள் காதலன், கள்ளக் காதலன் உட்பட நான்கு பேரின்பால் சந்தேகம் வருகிறது. இந்த மர்மத்தை சுற்றி கட்டமைக்கப்படும் வழக்கமான whodunit கதை Predictable climax-ல் முடிகிறது. 

மிஸ் வந்தனாவின் வாக்குமூலம் 
காதலர்கள் இருவர் வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஊரைவிட்டு ஓடிப் போகின்றனர். இருவருக்கும் அங்கே காத்திருக்கும் முடிவுகளும், எதிர்பாராத  திருப்பங்களும் இக்கதையை பரபரப்பு குறையாமல் நகர்த்தி செல்கின்றன. Epilogue-ல் வரும் climax இக்கதையை Decent thriller ஆக நிறைவு செய்கிறது.

நடுவில் ஒரு நங்கை
பார்த்தவுடன் காதலில் ஆரம்பித்து முக்கோண காதல் கதையாய் மாறி பழிவாங்கும் படலத்தில் முடிகிறது இந்த கதை. மற்றுமொரு சுமாரான treatment கொண்ட கதை. 

Murder mystery, Family drama, Suspense thriller என கமர்ஷியல் கலவையாய் அமைகிறது இந்த தொகுப்பு. விமர்சனங்கள் பல இன்று இருந்தாலும், இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் வெகுஜன ஏற்பை பெற்றிருக்கலாம். மொத்தத்தில் வாசகர்களுக்கான "timepass entertainment” தந்து வெகு மக்களிடம் சென்றடையும் "pulp fiction" கதைகளின் தொகுப்பு இது. 

No comments:

Post a Comment

“The Metamorphosis” by Franz Kafka

“The Metamorphosis” by Franz Kafka is a novella about a salesman Gregor who one morning wakes up and finds himself transformed into a venomo...