Monday 22 November 2021

ஜெய் பீம் - அதிகார அடக்குமுறைக்கு எதிரான அற வழி போராட்டம்

ஜெய் பீம் திரைப்படத்தில் 
வரும் அடையாளங்கள் இவை மட்டும் தான்.

பதவி தரும் அதிகாரத்தின் அடையாளமாய் SI குருமூர்த்தியும், மற்ற காவலர்களும், அரசு தரப்பு வக்கீல்களும்.  அந்த அதிகாரம் எந்த எல்லை வரைச் சென்று அடித்தட்டு மக்களிடம் தன் அடக்குமுறையை செலுத்தும் என்பதைக் காட்டுகிறது இப்படம்.

சாதியப் படிநிலை தரும் உயர் சாதி எனும் பிம்பத்தின் அடையாளமாய் ஊர் தலைவர். அந்த மனநிலை தரும் வன்மத்தின் வெளிப்பாட்டை ஒரு சில காட்சிகளில் பிரதிபலிக்கிறது இப்படம்.


சமூகத்தில் அங்கீகாரமற்று, உரிமையற்று, அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத விளிம்புநிலை மக்களின் அடையாளமாய் இராசாக்கண்ணு, செங்கேனி மற்றும் உறவினர்கள். அதிகாரமும், அரசியலும், சாதிய ஏற்றத்தாழ்வும் செலுத்தும் அடக்குமுறையை எதிர்த்து அவர்கள் சட்டத்தின் வழி நீதி தேடும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு.

இவைத் தவிர வேறு எந்த ஒரு அடையாளமும் இல்லை. 

இந்தத் திரைப்படம் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்யவே இந்த சர்ச்சைகள். இத்திரைப்படம் குறித்து நடக்கும் விவாதங்களும், உரையாடல்களும் அதையே செய்கின்றன.


"My Childhood" by Maxim Gorky

Maxim Gorky's "My Childhood", his autobiography is a painful recollection of his childhood that was strewn with poverty, lonel...