சென் பாலனின் "பரங்கிமலை இரயில் நிலையம்" ஒரு இரயில் நிலைய மரணத்தைச் சுற்றி நடக்கும் investigation drama. பரங்கிமலை இரயில் நிலையத்தில் மின்தொடர் வண்டியிலிருந்து தவறி தண்டவாள சுற்றுச் சுவரில் இடித்து ஒரு பள்ளி மாணவன் இறக்கிறான். வழக்கமாக இரயில்வே போலீஸ் விசாரிக்கும் இந்த கேஸை விசாரிக்க மாநில குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து detective கார்த்திக் அல்டோ வருகிறார். அவரிடம் CCTV காட்சி ஒன்று காட்டப்படுகிறது. அதனை கண்டவுடன் அல்டோவிற்கு இந்த கேஸின் தீவிரம் புலப்படுகிறது - காரணம் - மாணவன் இறப்பதற்கு முன்பு அவனை ஷு அணிந்த கால் ஒன்று இடுப்பில் வலுவாக உதைத்திருந்தது.
Template murder mystery எனினும் கொலையை stage செய்ய இரயிலை தேர்ந்தெடுத்ததால் diverse suspects - confined space என ஒரு interesting whodunit ஆக பயணிக்க எல்லா அம்சங்களும் அமையப் பெற்று தொடங்குகிறது இந்நாவல். விறுவிறுப்பான கதை நகர்வு, இறுதியில் வரும் revelation, கதையினூடே உரையாடல்களில் இடம்பெரும் அரசியல் நையாண்டி ஆகியவை plus. ஓரிரு அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வரும் trivia giveaway ஆக அமைவது minus.
இது நான் வாசித்த சென் பாலனின் முதல் நாவல். A passable read with no disappointments.


No comments:
Post a Comment