Monday, 16 September 2024

"சுபா"வின் "விறைத்த விழிகள்"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் "சுபா" எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். 



"விறைத்த விழிகள்" இவர்களது குறுநாவல். ஒருவன் திட்டமிட்ட ஒரு கொலை செய்ய எத்தனிக்கும் போது collateral damage ஆக இன்னொரு கொலையும் செய்ய வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்லாமல், அங்கே நடக்கும் எதிர்பாரா encounter-ல் தடயங்களும் தவறவிடப்படுகின்றன. பிரபலமான அந்த நபர் எதற்காக தானே இறங்கி அந்த கொலையில் ஈடுபட வேண்டும்? பண பலத்தால் தடயங்களை அழிக்க முற்படும் போது அது கைகூடியதா? இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டதா? 


இப்படி ஒரு template thriller ஆக அமைகிறது இந்நாவல். எனினும் characterisation, கதையில் வரும் காட்சிகளின் treatment, கதைமாந்தர்களின் செயல்களுக்கான justification இந்நாவலை உயிர்ப்புடன் வைக்கிறது. Predictable climax ஆக முடிகிறது, ஆனால் முன்னுரையில் அதற்கான suspense முடிச்சு well planned execution.

மொத்தத்தில் predictable yet free-flowing thriller!

No comments:

Post a Comment

John Grisham’s “The Exchange”

John Grisham’s “The Exchange” touted to be a sequel to his previous blockbuster novel “The Firm” starts off as a legal thriller and later sh...